உலகின் உயரமான ரயில் மேம்பாலம் அடுத்த ஆண்டு திறப்பு விழா

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement
உலகின் உயரமான ரயில் மேம்பாலம் அடுத்த ஆண்டு திறப்பு விழா

கவுரி: காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் இதர பகுதியுடன் இணைக்கும் உலகிலேயே உயரமான ரயில் பாலத்தின் கட்டுமானப் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக கொங்கன் ரயில்வே தலைமை பொறியாளர் ஆர்.கே.ஹெக்டே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:ஜம்மு-காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே ரீசி மாவட்டத்தில் உள்ள கவுரி நகரையும் பக்க நகரையும் இணைக்கும் வகையில் உலகின் உயரமான ரயில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2002ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சில் இந்த பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 2008ல் பணி நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் பணி துவங்கியது. தற்போது பிரதமர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செனாப் நதியில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலத்திற்கு 28 ஆயிரம் டன் உருக்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 கிலோ டி.என்.டி. குண்டு வெடிப்பை தாங்கும் திறன் கொண்டது. 8 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் எவ்வித சேதமும் அடையாது. மணிக்கு 260 கி.மீ. வேகத்தில் புயலடித் தாலும் அசைந்து கொடுக்காது உறுதியாய் நிற்கும்.ரயில் மேம்பாலத்தின் பணிகள் 83 சதவீதம் முடிந்து விட்டன.

அடுத்த ஆண்டு திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ரயில் மேம் பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது பிரான்சின் 'ஈபிள்' கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமாக இருக்கும். அத்துடன் சீனாவின் பீபன் நதி மீது 275 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட ஷூபி ரயில் மேம்பாலத்தை விட உயரமாக விளங்கும். மொத்தத்தில் உலகிலேயே மிக உயரமான ரயில் மேம்பாலம் என்ற சிறப்பை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X