பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வேல்முருகன், முனுசாமி, சக்திவேல் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து படைத்து மாணவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கவுஸ் நன்றி கூறினார்.மூங்கில்துறைப்பட்டுசங்கராபுரம் அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

பட்டதாரி ஆசிரியர் எழிலரசி வரவேற்றார். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அதன் பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செல்லம், சத்யா, கனல் ஆகியோர் உடனிருந்தனர். பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.சங்கராபுரம்சங்கராபுரம் அடுத்த விரியூர் இம்மாகுலேட் மகளிர் கல்லுரியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் பாத்திமா தலைமை தாங்கினார். பொங்கல் வைத்து படைத்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.திருக்கோவிலுார்திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ராஜ் வரவேற்றார். ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி தலைமையில் அலுவலக ஊழியர்கள் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சிகனியாமூர் டி.எஸ்.எம்., கல்வி நிறுவனங்களில் நடந்த விழாவிற்கு, தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் லதா வரவேற்றார். விழாவில், கல்லுாரி மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், கயிறு இழுத்தல், உறியடித்தல், கோலாட்டம், கரகாட்டம், கோலம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவையொட்டி, நிலைய வளாகத்தில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., ராமநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. உளுந்துார்பேட்டைபோலீஸ் நிலைய வளாகத்தில் நடந்த விழாவில், போலீசார் வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார் சேலை அணிந்தும் விழாவில் கலந்து கொண்டனர்.

டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, குருபரன், ஜெயசந்திரன், அலெக்ஸ், பால்ராஜ் மற்றும் போலீசார் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X