ரூ.1,700 கோடி மோசடி ஐதராபாத்தில் இருவர் கைது

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், பல்வேறு வங்கிகளில், 1,700 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த இருவரை, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்தவர், ஜி.எஸ்.சி.ராஜு. இவர், 'லியோ மெரிடியன் இன்ப்ராஸ்டரக்சர் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஓட்டல்ஸ்' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கூட்டாளி, ஏ.வி.பிரசாத்.

இவர்கள் இருவரும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில், 1,700 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 33 போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, இவர்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், ராஜு மற்றும் பிரசாத் ஆகியோரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அவர்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
16-ஜன-202019:53:57 IST Report Abuse
Muthukrishnan,Ram ஏம்பா வாங்கி மேலதிகாரிகளா இரு பேங்க்ல கடன் வாங்கி இருந்தாலே பாண் கார்டு காட்டி கொடுத்திருமே பின்னே எதை வச்சி நிறைய வங்கியில் கடன் வாங்க முடிந்தது. இதில் மிகப்பெரிய அலிபாபா வங்கியுள்ளே ஒளிந்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X