பொது செய்தி

இந்தியா

ஜம்முவில் இணைய சேவை கிடைப்பதில் சிக்கல்

Added : ஜன 15, 2020
Advertisement

ஜம்மு: ஜம்முவில், ஆறு மாதங்களுக்குப் பின், நேற்று மீண்டும் இணைய சேவை தர அரசு உத்தரவிட்ட போதிலும், பலர் தொடர்பு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370 வது சட்டப் பிரிவு, கடந்த ஆண்டு, ஆக.,5ல் நீக்கப்பட்டது. இதையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தடுக்க, 'மொபைல் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

இரு மாதங்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில், 'போஸ்ட்பெய்டு' மொபைல் போன் சேவை மீண்டும் துவங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம், ஜம்மு, சம்பா, கத்வா, உதம்பூர், ரீசி மாவட்டங்களில், மொபைல் வழி இணைய சேவைகளை மீண்டும் துவக்க, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது.

குறிப்பாக, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனை, ஓட்டல், வங்கி ஆகியவற்றில், இணைய பயன்பாடு தர அரசு உத்தரவிட்டது. எனினும், காலையில், பல இடங்களில், 'மொபைல்போனில் இணையவசதி கிடைக்கவில்லை' என, மக்கள் புகார் தெரிவித்தனர்.இதற்கு, 'இணையசேவை, துவக்கத்தில் குறைவான வேகத்தில் செயல்படும் என்பதால், பலருக்கு 'சிக்னல்' கிடைக்கவில்லை; இந்த குறை, இணைய வேகம் அதிகரிக்கும்போது நீங்கி விடும்' என, ஐம்மு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆறு மாதங்களுக்குப் பின், மொபைல்போனில் இணைய சேவை கிடைத்திருப்பது, ஜம்மு-காஷ்மீர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X