செய்திகள் சில வரிகளில்...

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

பள்ளிக்கூடத்தில் விமான எரிபொருள்லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு மேல் பறந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஒரு பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் விமான எரிபொருளை வெளியேற்றியுள்ளது. இதனால் அப்பள்ளி மாணவர்கள் 20 பேர் உள்ளிட்ட 31 பேருக்கு சரும எரிச்சல் மற்றும் சிறிய சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டன. அவர்களுக்கு அங்கேயே முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக குணப்படுத்தப்பட்டது.

பள்ளியில் துப்பாக்கிச்சூடுஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெலைர் உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட நபரை 4 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

பனிச்சரிவில் சிக்கி 111 பேர் பலிஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சூடானில் வன்முறைகர்த்தூம்: சூடானின் கர்த்தூம் பகுதியில் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை துறை அதிருப்தி அதிகாரிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசின் புதிய ஓய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன்புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்ட பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த நான்கு வாரங்களுக்கு சந்திரசேகர ஆசாத் டில்லிக்கு வரக்கூடாது என்று நிபந்தனை விதித்த நீதிமன்றம் டில்லியில் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தர்ணா போராட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

மகாராஷ்டிர முதல்வரின் உறவினர் பலிமும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் உறவினர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
16-ஜன-202007:39:35 IST Report Abuse
a natanasabapathy Chidambarathukkum ippadi than nibanthanai jamin vazhankappattathu aanaal avar thinamum petti alithu varukiraar jamin rathu seyyappadavillai sattam samaniyanukku mattum than
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X