இந்தியா

டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு 3வது கிளை

Added : ஜன 15, 2020
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதியில், டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் மூன்றாவது கிளை நேற்று திறக்கப்பட்டது.

வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பர்னிச்சர்கள், மொபைல் போன் விற்பனையில் தமிழகம் முழுவதும் 76 கிளைகளுடன் டார்லிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தனது 77 கிளையை புதுச்சேரியில் நேற்று துவக்கியது.ரெட்டியார்பாளையம், காமராஜர் சாலையில், ஏற்கனவே கிளைகள் உள்ள நிலையில், மூன்றாவது கிளையாக காந்தி வீதியில் நேற்று திறக்கப்பட்டது.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாக இயக்குனரும், டார்லிங் பொது மேலாளருமான வெங்கடசுப்பு தலைமை தாங்கினார்.ஜெயராம் ஓட்டல் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன், கிளையை திறந்து வைத்தார். மணி எலக்ட்ரானிக்ஸ் குணசேகரன், தொழிலதிபர் முகமது பர்வேஷ், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரமூர்த்தி, டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.நிறுவன நிர்வாக இயக்குனர்கள் நவராஜமுருகன், வீன் மற்றும் டார்லிங் ஊழியர்கள் பங்கேற்றனர்.

பொங்கல் மற்றும் திறப்பு விழாவையொட்டி, இரண்டு நாட்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாக இயக்குனர்கள் கூறுகையில், 'எந்த 4கே டிவி வாங்கினாலும், ரூ. 5000 கூடுதலாக செலுத்தினால் 32 இஞ்ச் எல்.இ.டி., டிவி வழங்கப்படும்; மொபைல் போனுக்கு தனி பிரிவு உள்ளது. பொருட்கள் வாங்குபவருக்கு 10 சதவீதம் உடனடி 'கேஷ்பேக்' , சுலப தவணையில் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசு, சுலப தவணை திட்டம், ரூ.10 ஆயிரத்தில் இருந்து 32 இஞ்ச் எல்.இ.டி., 'டிவி' கிடைக்கிறது. இந்த வாயப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X