அமெரிக்காவின் இந்திய தூதரகத்தில் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்பு

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மக்களுக்காக இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. இங்கு இந்திய கலாசாரத்தைப் பற்றி வெளிநாட்டு மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.இதற்காக தூதரகத்தின் கலாசார தூதரான மோக்ஸ் ராஜ் இந்திய கலாசார ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முதல் இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளார்.

இதுகுறித்து பேசிய மோக்ஸ் ராஜ் கூறியதாவது: உலகளவில் இந்தியாவின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆகையால் இந்திய கலை கலாச்சாரம் கட்டிடக்கலை குடும்ப அமைப்பு திருமண வாழ்க்கை ஹிந்தி திரைப்படம் யோகா சமையல் அரசியல் மற்றும் வணிகம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள வெளிநாட்டு மக்கள் விரும்புகின்றனர். அதற்காக ஹிந்தி மொழியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். ஹிந்தி மொழி மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை கோடிகளை கடந்து செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202021:06:36 IST Report Abuse
subbaiyanmohan Tamil also can .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X