பொது செய்தி

தமிழ்நாடு

நெருக்கடியில் தேங்காய் நார் உற்பத்தி தொழில்

Added : ஜன 16, 2020
Advertisement
நெருக்கடியில் தேங்காய் நார் உற்பத்தி தொழில்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் தேங்காய் மட்டை பற்றாக்குறையால் நார் உற்பத்தி தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் உற்பத்தியாகும் தேங்காய் நார் கயிறு மட்டுமே தயாரிக்க பயன்பட்டு பட்டு வந்தது. தற்போது வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரிக்கும் பணி வளர்ந்து வருகிறது. மேட்கள் மண் அரிப்பை தடுக்கும் கேக் தயாரிக்கவும் பயன்படுகிறது.

வடமதுரை பகுதி நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: வடமதுரை ஒன்றியத்தில் மோர்பட்டி கொல்லபட்டி வெள்ளைபொம்மன்பட்டி புதுப்பாளையம் மற்றும் நத்தம் சாணார்பட்டி ஒன்றியங்கள் அய்யம்பாளையம் பகுதிகளில் ஏராளமானோர் இத்தொழிலில் உள்ளனர். தேங்காய் உரித்து அகற்றப்பட்ட பின்னர் மீதமாகும் மட்டையை நன்கு காய வைத்து அதிலிருக்கும் நார் நவீன இயந்திரம் மூலம் பிரிக்கப்படுகிறது. ஏற்றுமதி தவிர உள்ளூரில் கைராட்டை மூலமும் கயிறு தயாரிக்கவும் தேங்காய் நார் விற்பனையாகிறது. இங்கு துகள்களாக ஏற்படும் கழிவுகள் கோழிப்பண்ணைகளுக்கு விற்கப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் தேங்காய் மட்டை கிடைப்பதில் பற்றாக்குறை இருப்பதால் நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X