தாளவாடி வனப்பகுதியில் பஸ்சை துரத்திய யானை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாளவாடி வனப்பகுதியில் பஸ்சை துரத்திய யானை

Added : ஜன 16, 2020

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே வனப்பகுதி சாலையில் நின்றிருந்த ஒற்றை யானை பஸ்சை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மலைப் பகுதியில் யானை சிறுத்தை புலி கரடி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடப்பது வழக்கம். சில நாட்களாக ஆசனுார் வழியாக தாளவாடி செல்லும் வனப்பகுதி சாலையோரங்களில் யானைகள் முகாமிட்டு வருகின்றன.

நேற்று காலை 10:00 மணியளவில் தாளவாடி செல்லும் வனப்பகுதி சாலையோரத்தில் ஒற்றை யானை ஒன்று பிளறியபடி அவ்வழியாக வந்த அரசு பஸ்சை 100 மீட்டர் துாரம் துரத்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டியதால் பயணியர் தப்பினர்.சாலையோரங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X