கைதியுடன் குடித்து விட்டு கும்மாளம் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதியுடன் குடித்து விட்டு கும்மாளம் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)

சேலம்: கைதியுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிட்ட இரு போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார் மல்லியக்கரையைச் சேர்ந்தவர் அன்பழகன் 32. பொதுச் சொத்தை சேதப்படுத்திய இவரை 4ம் தேதி மல்லியக்கரை போலீசார் கைது செய்து ஆத்துார் கிளை சிறையில் அடைத்தனர்.கடந்த 13ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு இளங்கோ 45 இரண்டாம் நிலை காவலர் சுதாகர் 32 ஆகியோர் ஆத்துார் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.

அன்று மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால் சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆஜர்படுத்திய பின் மீண்டும் ஆத்துார் சிறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அயோத்தியாப்பட்டணம் தாபா ஓட்டலில் கைதியுடன் சேர்ந்து மது அருந்தினர்.

போதையிலேயே கிளை சிறைக்கு சென்றனர். இதையறிந்த ஜெயிலர் பவுன்ராஜ் சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறை நிர்வாகம் சார்பில் கைதி இரு போலீசார் போதையில் இருந்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இளங்கோ சுதாகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றியும் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் ஆத்துார் டி.எஸ்.பி. ராஜுக்கு எஸ்.பி. தீபா கானிகேர் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X