இந்திய பகுதிக்குள் ஆளில்லா விமானங்கள்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (1)
Advertisement

பெரோஸ்பூர்; -பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, பெரோஸ்பூரில் இந்தியா - -பாக்., எல்லையில், இந்திய ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஷமகே எல்லை பகுதியில், டெண்டிவாலா கிராமத்தின் வான்வெளியில், ஆளில்லா விமானங்கள் பறந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பி.எஸ்.எப்., வீரர்கள், விமானங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.பின், பஞ்சாப் போலீசாருடன் இணைந்து, ஆளில்லா விமானங்களின் பாகங்களை தேடினர். ஆனால், அவர்களிடம் எதுவும் சிக்கவில்லை.எஸ்.பி,, பால்ஜீத் சிங் சித்து கூறியதாவது:டெண்டிவாலா கிராம பகுதியில், ஆளில்லா விமானங்கள் பறந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வானத்தில் காணப்படும், சந்தேகப்படும் வகையிலான பொருட்கள் குறித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஜன., ௭ம் தேதி இரவு, ஹுசானிவாலா எல்லை பகுதியில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட, ஐந்து ஆளில்லா விமானங்கள் பறந்ததை, பி.எஸ்.எப்., வீரர்கள் பார்த்துள்ளனர்.

இந்த விமானங்களில் ஒன்று, இந்திய எல்லை வான் பகுதியில், சுமார் ஒரு கி.மீ., தூரம் வரை, வந்து சென்றுள்ளது. இதனால், எல்லை பகுதியில், ஆளில்லா விமானங்களை கண்காணிக்கும் பணிகள், தீவிரம் அடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-202002:15:17 IST Report Abuse
தமிழ்வேல் சுடுவது சிரமம். தற்போது வலைபோட்டு பிடிக்கும் துப்பாக்கி வகை கன் சந்தைகளில் கிடைக்கின்றன. அதில் ஒன்று skywall 100 ..300
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X