காஷ்மீரில் போலீஸ் அதிகாரி கைது

Added : ஜன 16, 2020
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், போலீஸ் அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டதின் பின்னணியில், பயங்கர சதி உள்ளது. இது பற்றி, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பயங்கரவாதிகளை, டில்லிக்கு அழைத்து வர முயற்சித்ததாக, காஷ்மீரில் போலீஸ் அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்ட்டவர் பெயர், தேவேந்தர் கான் என்றிருந்தால், பா.ஜ.,வின் தாய் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்., துள்ளி குதித்திருக்கும். இதன், சமூக வலை தள ஆர்வலர்கள், குறிப்பிட்ட சமூகத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்திருப்பார்கள். தேவேந்தர் சிங் என்பதால், அமைதியாக உள்ளனர். பயங்கரவாதிகளை, தேவேந்தர் சிங் மட்டும், தனியாக டில்லிக்கு அழைத்து வந்திருக்கமமாட்டார். இதற்குப் பின், பயங்கர சதி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான, உண்மையான குற்றவாளிகள் யார் என சந்தேகம் எழுந்துள்ளது.யாருடைய உத்தரவின் பேரில் தேவேந்திர சிங், பயங்கவராதிகளை டில்லிக்கு அழைத்து வர முயற்சித்தார். அவர் பலிகடாவாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என, காங்., சந்தேகிக்கிறது.இதற்கெல்லாம், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் பதில் அளிக்க வேண்டும். இது பற்றி முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு தேவேந்திர சிங் எப்போதிருந்த உதவி செய்து வருகிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். புல்வாமா, டி.எஸ்.பி.,யாக தேவேந்திர சிங் இருந்த போதுதான், பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானை பாதுகாக்கும் காங்கிரஸ்இந்தியாவை தாக்கி, பாகிஸ்தானை பாதுகாப்பதில், காங்கிரஸ் துடிப்புடன் செயல்படுகிறது என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பதில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் எம்.பி., ராகுலுக்கு சந்தேகம் உள்ளது போல் தெரிகிறது. பாகிஸ்தான் காரணம் இல்லை என்றால், வேறு யார் என, அவர்கள் தான் சொல்ல வேண்டும்.பாகிஸ்தானின் கூட்டாளி போல், ராகுல் செயல்படுகிறார். பயங்கரவாத தாக்குதலுக்கு மதசாயம் பூசி, ஹிந்துக்களை குற்றம் சாட்டுவது, காங்கிரசின் பிறவி குணம். அதனால் தான், காவி பயங்கரவாதம், ஹிந்து பயங்கரவாதம் என, புதுப்புது வார்த்தைகளை காங்கிரஸ் கண்டுபிடித்தது.தாயகத்தை தாக்கி, பாகிஸ்தானை பாதுகாக்க, காங்கிரஸ் துடிக்கிறது. தாயை அழிக்கும் மலைபாம்பு போல்,காங்கிரஸ் உள்ளது. ராகுலை, பாக்., பிரதமர் இம்ரான், பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆகியோர் பாராட்டுவார்கள்.இவ்வாறு, சம்பித் பத்ரா கூறினார்.வீ

ரதீர செயல் விருது வழங்கப்படவில்லைகாஷ்மீரில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி, தேவேந்தர் சிங்குக்கு, கடந்த ஆண்டு, சுதந்திர தின விழாவில், வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்பட்டது என, வெளியான தகவலை, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச போலீசார் மறுத்துள்ளனர்.இது பற்றி யூனியன் பிரதேச காவல் தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், வீரதீரச் செயல் விருது பெற்ற தேவேந்தர் சிங், வேறு ஒருவர்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X