பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் கோவிலில் கவர்னர் வழிபாடு

Added : ஜன 16, 2020
Advertisement

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.கொங்கு மண்டலத்தின் முக்கிய திருத்தலமாக விளங்குவது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு நேற்று காலை, 7:30 மணிக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருகை தந்தார்.

அவரை, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ராஜமாணிக்கம், பேரூர் கோவில் உதவி ஆணையர் ஹரிஹரன் ஆகியோர் வரவேற்று, சிறப்பு மரியாதை அளித்தனர்.பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்பாள், நடராஜர், சிவகாமி அம்பாள், ஆஞ்சநேயர் சுவாமிகளை கவர்னர் தரிசனம் செய்தார். அவர் வருகையை முன்னிட்டு, பேரூர் மற்றும் சிறுவாணி ரோட்டில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X