தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில்  121 இடங்களில்  பொங்கல் விழா

Added : ஜன 16, 2020
Advertisement

ராமநாதபுரம், -ராமநாதபுரம் மாவட்டத்தில் 121 இடங்களில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது.மக்கள் கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்தனர்.பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, எமனேஸ்வரம் நயினார்கோவில் சத்திரக்குடி, பார்த்திபனுார், கீழக்கரை, திருப்புல்லாணிஏர்வாடி, சிக்கல், வாலிநோக்கம், சாயல்குடி, தொண்டி, திருவாடானை, எஸ்.பி.பட்டினம், திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்துார், கீழத்துாவல், இளஞ்செம்பூர், கடலாடி, ராமேஸ்வரம், மண்டபம், உச்சிப்புளி, பாம்பன், கமுதி அபிராமம், பெருநாழி உள்ளிட்ட 121 இடங்களில் பொங்கல் திருவிழாகொண்டாடப்பட்டது.பொங்கல் தினத்தில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.இளைஞர்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயில், குண்டுக்கரை முருகன் கோயில்,வழிவிடு முருகன் கோயில், வெட்டுடையார் காளி கோயில்உட்பட கோயில்களில் சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் சன்னதியில் உள்ள பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர்,கல்யாண ஜெகநாதப்பெருமாள் ஆகியோருக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூர் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மஞ்ச மாதாவிற்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. உலகநன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம்வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.ராமேஸ்வரம்: தை பொங்கல் விழா யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 10:30 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன், பிரியாவிடை அம்மனுடன்எழுந்தருளினர். கோயில் ரத வீதியில் சுவாமி, அம்மன் உலா வந்ததும், வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X