உரிய காப்பீடு இல்லாததால்மிளகாய் செடிகள் கருகி வருகின்றன

Added : ஜன 16, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் -ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் மிளகாய் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர்இல்லாததாலும், பனி பொழிவு அதிகரித்துள்ளதால் மிளகாய் செடிகள் கருகி வருகின்றன.அதற்கு உரிய காப்பீடு இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி நிலங்கள் தான் 90 சதவீதம் உள்ளன. இதில் பருவமழைகாலங்களில் நெல் விதைக்கப்பட்டு அறுவடை நடந்து வருகிறது. புரட்டாசி மாதத்தில் மானாவாரியாகபயிரிட்ட குண்டு மிளகாய் செடிகள் நடவு செய்த போது கன மழை பெய்து மிளகாய் செடிகள்அழுகியதல் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மழை குறைந்து பனி பெய்வது அதிகரித்து வருகிறது. மிளகாய் செடிகள் பறிக்கும் தருணத்தில் செடியிலேயே கருகி வருகிறது. நுாற்றுக்கணக்கானஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் கருகி வருகிறது.அக்கிரமேசி விவசாயி முனியாண்டி தெரிவித்ததாவது: இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மிளகாய் பயிரிட்டுள்ளோம்.5 மாத பயிரான மிளகாய் செடிகளுக்கு தற்போது மழை இல்லாததால் பனியில் கருகி வருகிறது. இந் நிலை நீடித்தால்மிளகாய் அனைத்தும் சோடையாகி விடும் நிலை உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X