பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம்

Added : ஜன 16, 2020
Advertisement

பரமக்குடி, -மார்கழி மகா உற்ஸவத்தையொட்டி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நேற்றுடன் நிறைவடைந்தது.பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் டிச.,17ல் துவங்கிய மார்கழி விழா நேற்று முன் தினம் நிறைவடைந்தது. தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பகல் பத்து, ராப்பத்து உற்ஸவம் நடந்தது. அப்போது 12 ஆழ்வார்களின் பாசுரங்களை அர்ச்சகர்கள் வாசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜன., 6 அன்று பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்தார்.ராப்பத்து உற்ஸவத்தின் எட்டாம் நாள் அன்று வேடுபறி உற்ஸவமும், பத்தாம் நாளான நேற்று நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைந்தது. தொடர்ந்து நேற்று தை பொங்கலையொட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* சாயல்குடி கைலாச நாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில்பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.* சிக்கல் அருகே கொத்தங்குளம் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில்ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கலிட்டு வழிபாடு நடந்தது.முதுகுளத்துார்: முதுகுளத்துார் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் தை மாதம் முதல் நாளை முன்னிட்டு பால்,பன்னீர்,சந்தனம்,தேன் உள்ளிட்ட 18 வகையான அபிேஷகங்கள் நடந்தது.சிறப்பு அலங்காரம் சிறப்புபூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஜயப்பனுக்கு 18 வகையான சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. செல்வி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஜயப்பன் கோயிலில் சிறப்புபூஜைகள் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X