பொது செய்தி

தமிழ்நாடு

ரெகுநாதபுரத்தில் மகர ஜோதி தரிசனம்

Added : ஜன 16, 2020
Advertisement

ரெகுநாதபுரம், ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு, மகர ஜோதி தரிசனம் நடந்தது.நேற்று அதிகாலை கணபதி ஹோமமும், மாலை 4:00 மணியளவில் வல்லபை விநாயகர், வல்லபை ஐயப்பன், மஞ்ச மாதா ஆகிய தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மாலை 6:30 மணிக்கு மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும் நேரத்தில், கோயில் வெளிபிரகாரத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் முழங்க மகரஜோதி ஏற்றப்பட்டு தீபதரிசனம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை குருசாமி மோகன்சாமி, ரெகுநாதபுரம் வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X