பொது செய்தி

தமிழ்நாடு

உலக அரங்கில் சிறப்பிடம் பெற வேண்டும்: வேளாண் பல்கலை துணைவேந்தர் விருப்பம்

Added : ஜன 16, 2020
Advertisement
 உலக அரங்கில் சிறப்பிடம் பெற வேண்டும்:  வேளாண் பல்கலை துணைவேந்தர் விருப்பம்

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட, பசு மாட்டுக்கு துணை வேந்தர் குமார் மாலை அணிவித்து கோமாதா பூஜை செய்தார். பல்கலை பண்ணை வளாகத்தில் ஒன்பது பாத்தி அமைக்கப்பட்டிருந்தது.அதில் பட்டி அமைத்து, பால், தயிர், நவதானியம், கோமியம், பன்னீர், கஞ்சி, தண்ணீர், இளநீர், மஞ்சள் ஊற்றப்பட்டது. பூஜிக்கப்பட்ட பசு மாடு, நவதானியங்கள் இடப்பட்ட பட்டியை மிதித்தது. மற்ற மாடுகள் ஒவ்வொன்றாக பட்டியை மிதித்து கடந்து சென்றன.தொடர்ந்து நடந்த விழாவில் பேசிய துணை வேந்தர், ''ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறையிலும் நம் பல்கலை முன்னோடியாக இருக்க வேண்டும். அதற்காக, 433 பதவியிடங்கள் கேட்டுப்பெற்று பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.''கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் நம் பல்கலை இரண்டாம் இடத்தை பெற்றது.

இந்த ஆண்டு சிறந்த பல்கலையாக முதலிடத்தை பிடிப்பதோடு, உலக அரங்கில் தலை சிறந்த பல்கலை என்ற பெயரையும் எடுக்க வேண்டும்,'' என்றார்.முன்னதாக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிர் மேலாண்மை இயக்குனர் கீதாலட்சுமி, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் கீதா, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.தொழிலாளர்களுக்கு, கயிறு இழுத்தல், பந்து எறிதல், லக்கி கார்னர், லெமன் ஸ்பூன், பலுான் ஊதுதல் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டன. மேற்பார்வையாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X