செண்டு பூ விலை சரிவு விவசாயிகள் கவலை

Added : ஜன 16, 2020
Advertisement

சிங்கம்புணரி, எஸ்.புதூர் அருகே பொட்டப்பட்டியில் செண்டு பூவின் விலை சரிவால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.எஸ்.புதுார் ஒன்றியத்தில் நெல், பூக்கள் விளைச்சல் அதிகளவில் காணப்படும். தை பொங்கலை முன்னிட்டு செண்டு பூக்களின் தேவை அதிகரிக்கும் என்பதால், இப்பகுதியில் நுாறு ஏக்கருக்கும் மேலான விவசாயிகள் இப்பூக்களை நடவு செய்திருந்தனர். தற்போது அறுவடையாகும் பூக்களை விவசாயிகள் மதுரை பூ மார்க்கெட்டிற்கு எடுத்து சென்றனர். பனி துவங்கியதால், செண்டு பூச்செடியில் கருகல் நோய் தாக்கி வருகின்றன. இதனால் பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இது குறித்து பொட்டப்பட்டி விவசாயி நாச்சன் கூறியதாவது: கருகல் நோய் தாக்கியதால், பூக்களின் விலையில் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஒரு கிலோ ரூ.50 க்கு வியாபாரிக்கு வாங்கினர். நோய் தாக்கல் காரணமாக ரூ.35 க்கு தான் வாங்குகின்றனர். இதனால் வீதிகளில் கொட்டிவிடுகிறோம். சில விவசாயிகள் வயல்களில் உரத்திற்காக பூக்களை கொட்டுகின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X