தமிழ்நாடு

புதிய குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க ரூ.700 கோடி கிடைக்குமா ஆசியன் வளர்ச்சி வங்கியை நாடியது மாநகராட்சி

Added : ஜன 16, 2020
Advertisement
 புதிய குடிநீர் பகிர்மான குழாய் பதிக்க ரூ.700 கோடி கிடைக்குமா   ஆசியன் வளர்ச்சி வங்கியை நாடியது மாநகராட்சி

மதுரை, மதுரையில் புதிய குடிநீர் பகிர்மான குழாய், வீடுகளில் மீட்டர் பொருத்த அறிவிக்கப்பட்ட ரூ.700 கோடி திட்டத்தை செயல்படுத்த ஆசியன் வளர்ச்சி வங்கியிடம் மாநகராட்சி நிதி கோருகிறது.


மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முல்லை பெரியாறில் இருந்து கூடுதலாக தினமும் 125 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கும் ரூ.1020 கோடி திட்டத்தை மாநகராட்சி அறிவித்தது. முல்லை பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து நீர் எடுப்பது, சுத்திகரிப்பது, நகருக்கு கொண்டு வருவது என 3 கட்டமாக பணி நடக்கிறது. 3ம் கட்டப் பணி
மட்டும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இத்திட்டத்தில் 4வது கட்டமாக புதிய பணியை மாநகராட்சி சேர்த்துள்ளது. அதன்படி அடிக்கடி உடைந்து சிரமப்படுத்தும் பழமையான பகிர்மான குழாய்கள் மாற்றப்பட உள்ளன. புதிதாக பகிர்மான குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள், மீட்டர் பொருத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்பணி 18 வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. மற்ற வார்டுகளில் பணியை மேற்கொள்ள ரூ.700 கோடி தேவை. தற்போது மாநகராட்சி வசம் ரூ.77 கோடி உள்ளது. தேவைப்படும் நிதியை ஆசியன் வளர்ச்சி வங்கியிடம் கேட்க மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.265 கோடி கேட்டு சில நாட்களுக்கு முன்பு திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2வது கட்டமாக ரூ.300 கோடி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.
800 கி.மீ., பகிர்மான குழாய்கள்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டத்தின் மூலம் 24 மணி நேரம் குடிநீர் பெறலாம். 800 கி.மீ., நீளம் வரை புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. வீடுகளில் மீட்டர் பொருத்த உள்ளோம். மக்கள் பயன்படுத்தும் நீருக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆசியன் வளர்ச்சி வங்கி முழு நிதியையும் அனுமதித்துவிடும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X