கதவை அரிக்கும் கரையான்கள்| Dinamalar

கதவை அரிக்கும் கரையான்கள்

Added : ஜன 16, 2020

--மேலுார், மேலுார் ஒன்றியம் அரிட்டாபட்டியில் ஊராட்சி அலுவலகம் சிதிலமடைந்ததால் அருகிலுள்ள மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்படுகிறது.இந்த அலுவலகம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கட்டடம் முழுவதும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் நிலை, கதவு, ஜன்னல் அனைத்தும் கரையான் அரிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. ஒன்றிய அதிகாரிகள் கட்டடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X