தமிழ்நாடு

ண திண்டுக்கல் மாநகராட்சியில் வரி செலுத்த அவகாசம் குடிநீர், சாக்கடை துண்டிப்பை தவிர்க்க

Added : ஜன 16, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் வரி பாக்கியை செலுத்தாவிட்டால் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும். மார்ச் 31க்குள் செலுத்த அவகாசம் உண்டு என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.திண்டுக்கல் மாநகராட்சியில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த முதற்கட்டமாக, நகர் பகுதியில் 22 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள் ளது. வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு பெற, கட்டடங்களின் பரப்பளவை பொருத்து வைப்பு தொகை மற்றும் சேவை கட்டணம் செலுத்தி, இணைப்பு பெறலாம் என பொது மக்களுக்கு அறிவுறத்தப்பட் டது. இதுவரை 10 ஆயிரத்து 500 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் குடிநீர், சாக்கடை, சொத்து மற்றும் குப்பை வரி மாநகராட்சியில் வசூலிக்கப்படுகிறது. இதில் பாதாள சாக்கடை வரியை பலரும் செலுத்தாமல் உள்ளனர். பாதாள சாக்கடை வரி மட்டுமே ரூ.1 கோடியே 68 லட்சத்து வசூலாகாமல் நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.டிபாசிட் மற்றும் வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் வரி பாக்கி வசூலாகாததால் மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளனர். சென்ற வாரம் நீண்ட நாட்களாக வரி செலுத்தாத 20 வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்தனர். இதே போல் வரி செலுத்தாத வீடு, வணிக நிறுவனங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க வரி செலுத்தாதவர்கள் மார்ச் 31 க்குள் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X