திண்டுக்கல் கோயில்களில் பொங்கல் வழிபாடு| Dinamalar

தமிழ்நாடு

திண்டுக்கல் கோயில்களில் பொங்கல் வழிபாடு

Added : ஜன 16, 2020

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், மலையடிவாரம் ஸ்ரீநிவாச பெருமாள், ஆஞ்சநேயர் கோயில், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், எம்.வி.எம்.நகர் வெங்கடாஜலபதி, திருச்சி ரோடு தீப்பாச்சியம்மன், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் புத்தாடை அணிந்து பொங்கலை கோலாகலமாக கொண்டாடினர். திண்டுக்கல் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழாவுக்கான பணியில் விழாக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.பழநி: பழநி முருகன் மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆனந்தவிநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு கரும்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு, திருமஞ்சன அபிேஷகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில் சிறப்பு அபிேஷகம், வழிபாடு நடந்தது. வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பரமபதநாதர் அலங்காரத்தில் சுவாமி புறப்பட்டு கேடயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் நடந்தது. தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலிலும் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில் மற்றும் குல தெய்வ கோயில்களில் மக்கள் சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X