பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டி திண்டுக்கல் காளை(யர்)கள் தயார்

Added : ஜன 16, 2020
Advertisement

திண்டுக்கல், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க திண்டுக்கல்லில் காளைகளும், காளையர்களும் தங்களை மும்முரமாக தயார்படுத்தி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அலங்காநல்லுார், பாலமேடு மற்றும் திண்டுக்கல், கோவையில் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திண்டுக்கல் 'நிறைஞ்ச மனசு குரூப்' சார்பில் காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்று பரிசுகளை அள்ளி வருகின்றனர். இந்தாண்டு நடக்க இருக்கும் அலங்காநல்லுார், பழநி, திண்டுக்கல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.திண்டுக்கல் செல்வம் கூறியது: எங்கள் குரூப் சார்பில் பல இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், மாடுபிடிவீரர்கள் பங்கேற்று பரிசு வாங்கியுள்ளோம். குறிப்பாக 'ராமு' என்ற காளை வீராலிமலையில் நடந்த ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் வென்றது. இந்தக் காளை மட்டும் இதுவரை தங்க காசுகள், பீரோ, கட்டில், சைக்கிள்கள், பிரிட்ஜ் உட்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை வென்றுள்ளது. முதல் முறையாக நாளை (ஜன.17) அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் காளை ராமு பங்கேற்க இருக்கிறது என, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X