வாசகர்களின் புகார்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

போக்குவரத்து இடையூறுபழநி அடிவாரம் இடும்பன் மலைக்கோயில் இட்டேரி ரோட்டில் பாதயாத்திரை பக்தர்கள் வரும் வழியில் தற்காலிக கூடாரம் அமைத்து யாசகம் கேட்பவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--கணேசன், திருநகர். குப்பைகளால் அவதிபழநி கோர்ட்டுக்கு பின்புறம் தெற்கு அண்ணா நகர் செல்லும் பாதையில் குப்பைகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். --முருகன், பழநி.கூடுதல் தெருவிளக்கு தேவைகன்னிவாடி ரெட்டியார்பட்டி காலனியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. கூடுதலாக தெருவிளக்கு அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ஜி.சந்திரகாந்த், கன்னிவாடி.--சுகாதார வளாகம் சேதம்ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு அருகே சமத்துவபுரத்தில், சுகாதார வளாகம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.- -டி.அருள்ராஜ், ஆதிலட்சுமிபுரம். சேதமடைந்த ரோடுகோபால்பட்டியிலிருந்து குரும்பபட்டி வழியாக மருனூத்து செல்லும் ரோடு ஒருபுறமாக நெடுகிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்- கண்ணன், மேட்டுப்பட்டி கழிவுகளால் துர்நாற்றம் திண்டுக்கல் -பழநி ரோட்டில் காய்கறி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் சிலர் குப்பையில் தீயிட்டு செல்கின்றனர். இதை தடுக்க மாநகராட்சிநடவடிக்கை எடுக்க வேண்டும். - சபரிஷ், திண்டுக்கல் துாசியால் தொல்லைதிண்டுக்கல்லில் முக்கிய ரோடுகளில் மணல் பரவி கிடக்கின்றன. அதிலிருந்து கிளம்பும் துாசியால், வாகன ஓட்டிகள் கண்களை மூடியபடியே செல்லும் நிலை உள்ளது. அதே போல் மணலால் வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது. மணலை சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை.- -- மணிவேல், திண்டுக்கல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X