பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

வடமதுரை, வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் ஊர்மந்தையில் விளையாட்டு போட்டி நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். வெள்ளபொம்மன்பட்டி காளியம்மன் கோயில் முன்பு ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கிராமத்தினர் சொந்த பணத்தில் அமைத்துள்ள கலையரங்கில் பரிசு வழங்கும் விழா நடக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே பகுதியில் வேறு தரப்பினர் தனியாக கலையரங்க மேடை கட்ட முயற்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. கட்டுமான பணி துவக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.இப்பிரச்னையால் தற்போது இங்குள்ள பொது இடத்தில் விளையாட்டு போட்டி நடத்தினால் தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தாண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளை யாரும் நடத்தக்கூடாது என அனுமதி மறுத்து கிராமத்தினருக்கு, வடமதுரை போலீசார் குறிப்பானை வழங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X