பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்

Added : ஜன 16, 2020
Advertisement

வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சீனியர் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.முதல்வர் ரியா வரவேற்றார். தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்திய கபடி அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாஸ்கரன் பேசினார்.ஸ்கை டைவிங் வீரர் ராஜ்குமார் பேசியது: மாணவர்கள் குழந்தையாக இருக்கும் போது பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்கள் விருப்பப்படி என்ன பாடம் படிக்க விரும்புகிறார்களோ அதை நோக்கிய கல்வி இருக்கவேண்டும். தங்களது ஆசை, கனவுகளை மாணவர்கள் மேல் திணிக்கக்கூடாது. படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. அதையும் தாண்டிய உலகம் உள்ளது. மாணவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பதை பெற்றோர்கள் கண் காணித்தால் மட்டும் போதும், இவ்வாறு அவர் பேசினார்.போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தாளாளர் கயல்விழி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X