இந்தியா

குறைப்பு! அரசின் கட்டுமான பணிக்கான விலை பட்டியல் 10 சதவீதம் ... திட்ட மதிப்பீடு எகிறியதால் புதுச்சேரி அரசு முடிவு

Added : ஜன 16, 2020
Advertisement
குறைப்பு!  அரசின் கட்டுமான பணிக்கான விலை பட்டியல் 10 சதவீதம் ... திட்ட மதிப்பீடு எகிறியதால் புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி : புதுச்சேரியில், பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டுமான பணிகள், பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமான செலவுகள், ஒவ்வொரு கட்டுமான பொருளின் விலை, வேலையாட்களின் கூலி உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, கட்டுமான பணிக்கான தொகையை, பொதுப் பணித்துறை வரையறுக்கிறது.கட்டுமான பணிக்கான செலவின பட்டியலை தயாரித்த பிறகு, அதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது. செலவு தொகையை அடிப்படையாக வைத்தே, கட்டுமானப் பணிக்கான 'டெண்டர்' விடப்படுகிறது.பொதுப்பணி துறையின், அரசு கட்டுமான பணிக்கான விலை பட்டியலில், தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோப்பிற்கு, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். டில்லியை கைவிட்டது ஏன்? ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு விதமான கட்டுமான பணிக்கு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்தில் டி.எஸ்.ஆர். (தமிழ்நாடு ஷெட்யூல்டு ரேட்) என்ற பெயரிலும், டில்லியில் டி.எஸ்.ஆர். (டில்லி ஷெட்யூல்டு ரேட்) என்ற பெயரிலும் கட்டுமான பணிக்கு விலை பட்டியல் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதுச்சேரியில், பி.எஸ்.ஆர். (புதுச்சேரி ஷெட்யூல்டு ரேட்) என்ற பெயரில் கட்டுமான பணிக்கான விலை பட்டியலை பொதுப்பணித் துறை வாயிலாக நிர்ணயம் செய்து, பின்பற்றப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், மத்திய பொதுப்பணி துறை அமைச்சகத்தின் டெண்டர், ஏல நிபந்தனை வழிமுறைகளையும், புதுச்சேரி அரசு பின்பற்றி வருகிறது. இது, முரண்பாடாக இருந்தது.எனவே, 2018-19 ம் ஆண்டிற்கான விலை பட்டியலை நிர்ணயம் செய்யும்போது, புதுச்சேரி அரசின் பி.எஸ்.ஆர். 'ரேட்'டை கைவிட்டு, மத்திய பொதுப்பணித் துறை அமைச்சகம் பின்பற்றும், டில்லியின் டி.எஸ்.ஆர். 'ரேட் சார்ட்'டை பின்பற்றலாம்.அதன் மூலம், புதுச்சேரி அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என மாநில பொதுப்பணி மற்றும் நிதித்துறைகள் கணக்கு போட்டு, முடிவு எடுத்தன. ஆனால், 2018-19 நிதியாண்டில், டில்லியின் டி.எஸ்.ஆர். ரேட்டின்படி, திட்ட மதிப்பீட்டை அணுகும்போது, 40 சதவீதம் வரை செலவு எகிறியது.

அரசுக்கு கூடுதலாக செலவு ஆகும் சூழல் ஏற்பட்டது.எனவே, பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, புதுச்சேரியின் பி.எஸ்.ஆர். விலை பட்டியலே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.இதை தொடர்ந்து, புதுச்சேரி அரசின் பி.எஸ்.ஆர். ரேட்டையே தொடர்ந்து, பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, அதில் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X