காட்டுப்பன்றிகளால் வாழை பாதிப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

செம்பட்டி, செம்பட்டியில் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த, கொட்டும் பனியில் விவசாயிகள் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான செம்பட்டி, கோழிப்பண்ணை, ஆத்துார், எஸ்.பாறைப்பட்டி, வக்கம்பட்டி, வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், சோளம், வாழை சாகுபடி நடக்கிறது. மலைக் கிராமங்களைத் தொடர்ந்து, அடிவாரத்திலும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த சாகுபடி பரப்பைச் சுற்றி வண்ண சேலைகளை மறைத்துக் கட்டி வேலி அமைத்துள்ளனர். வண்ண ஆடைகளை பயன்படுத்துவதால், காட்டுப்பன்றிகள் வருவதை கட்டுப்படுத்தலாம் எனும் நம்பிக்கையில் உள்ளனர். இருப்பினும் அவற்றின் தாண்டவம் அடங்கியப்பாடு இல்லை. ஆத்துாரில் வாழை தோட்டங்களுக்குள் புகுந்து தேசப்படுத்துகின்றன. இதனால் கொட்டும் பனியிலும் விவசாயிகள் காவல் பணியை தொடர்கின்றனர். இரவு முழுவதும் டப்பாவை வைத்து ஒலி எழுப்பியபடி காட்டுப்பன்றியை விரட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X