திண்டுக்கல்லில் 'பனி'க்கு பலியாகும் பூக்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் பனியால் ஏற்படும் பூக்கள் சாகுபடி பாதிப்பை தடுக்க வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ் ஆலோசனை வழங்கினார்.திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், பழநியில் மல்லிகை, கனகாம்பரம், செண்டுப்பூ, முல்லை பூ, சம்மங்கி அதிகளவில் சாகுபடியாகிறது. கடந்த ஒரு மாதமாக திண்டுக்கல்லில் நிலவும் கடும் பனியால் பூ செடிகள் கருகி, பூக்கள் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இதை இயற்கை முறையில் எளிதில் தடுக்க ஒரு ஏக்கருக்கு 10 லிட்டருக்கு 30 மி.லி., சூடோமோனாஸ் அல்லது விரிடியை தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்கலாம். பின்னர் தரைவழியாக தண்ணீருடன் கலந்து செடிகளுக்கு கிடைக்கும் வகையில் செய்யலாம். இரண்டையும் ஒரே நாளில் செய்ய வேண்டும்.அடுத்த நாள் (2ம் நாள்) எதுவும் தர கூடாது. இதனால் பனியால் கருகுவது விடுபட்டு நிலத்தில் உள்ள பூஞ்சாணங்களில் இருந்து முழுமையாக விடுபடலாம். இயற்கை இடு பொருட்களை செடிகள் எளிமையாக உட்கிரகித்து கொண்டு நன்றாக வளர்ச்சி பெறும். மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு 300 மி.லி., மீனமிலம் அல்லது ஒரு லிட்டர் இ.எம்., அல்லது பஞ்சகாவியாவை தரைவழி தண்ணீருடன் கலந்து கொடுக்கலாம். அதே நாளில் காலை 5:00 முதல் 8:00 மணிக்குள் அரப்பு மோர் கரைசல் அல்லது தேமோர் கரைசலை 10 லிட்டருக்கு 750 மி.லி., கலந்து தெளிக்கலாம்.இதன் மூலம் ஒவ்வொரு செடிகளிலும் அதிக அரும்புகளை தொடர்ந்து கொடுக்கும். நான்காம் நாளில் இருந்து தேவைப்படும் போது காலை 5:00 முதல் 8:00 மணி அல்லது மாலை 4:00 மணிக்கு மேல் போரான் துாளை 10 லிட்டருக்கு 10 மி.லி., கலந்து தெளிக்கலாம். இதனால் பெரிய கணமான காம்பு நீளமான பூக்கள் கிடைக்கும் என, அவர் ஆலோசனை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X