இந்தியா

15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சிறுவர் ரயில்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : தாவரவியல் பூங்காவில், 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறுவர் ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.

புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே, பிரெஞ்சுக்காரர்களால் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா உள்ளது. 2,700 வகைகளில் அரிய மரங்கள், கல் மரங்கள் எனப்படும் புதைபடிவ தாவரங்களை இங்கே பார்க்கலாம்.இந்த பூங்காவில், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கும் வகையில், சிறிய ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அரசுக்கு, ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.சரியான பராமரிப்பில்லாததால், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிறுவர் ரயில் இயக்குவது நிறுத்தப்பட்டது.

சிறுவர் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதையடுத்து, சிறுவர் ரயில் மற்றும் தண்டவாள கட்டைகளை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இப்பணியை, தென்னக ரயிவே அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். புதுப்பிக்கப்பட்ட சிறுவர் ரயில், நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கவர்னர் கிரண்பேடி, ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி, தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் வேதாச்சலம், இணை வேளாண் இயக்குனர் ராகவன், துணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு, பணிமனை துணை வேளாண் இயக்குனர்கள் சுந்தர், கோவிந்தராஜ், வேளாண் அலுவலர்கள் உமாராணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.15 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்ட ரயிலில், சிறுவர்கள் உற்சாகமாக பயணம் செய்து மகிழ்ந்தனர்.சிறுவர் ரயில் மீண்டும் ஓடத் துவங்கினாலும், அதன் சக்கரங்கள் பலவீனமாக உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி, அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி வரை காலை 10.௦௦ மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை சிறுவர் ரயில் இயக்கப்பட உள்ளது.அதன் பிறகு வார விடுமுறையில் மட்டும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டணத்தில் எந்த மாற்றம் செய்யாமல், பெரியவர்களுக்கு 10 ரூபாய், சிறுவர்களுக்கு 5 ரூபாய் என, பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.சிறுவர் ரயிலின் பின்னணிதாவரவியல் பூங்காவில், கடந்த 1973ம் ஆண்டு சிறுவர் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீசல் இன்ஜின் மற்றும் பெட்டிகள், ஐதரபாத் வென்ட்ரா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டன. தென்னக ரயில்வே மேற்பார்வையில், 700 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் சிறுவர் ரயில் ஓடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X