இந்தியா

தட்டாஞ்சாவடி - கோரிமேடு சாலையில் திக். திக்.. திக்..

Added : ஜன 16, 2020
Advertisement

.புதுச்சேரி : கோரிமேடு சாலையில், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க டோல்கேட் நிர்வாகம் கைவிரித்துள்ளதால், அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை தொடர்கிறது.

கோரிமேட்டில் துவங்கி,தட்டாஞ்சாவடி வரை, சாலை சரிவாக உள்ளதால், வாகனங்களின் வேகம்,விபத்துக்களை கட்டுப்படுத்த, முக்கிய சந்திப்புகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சந்திப்பு, பாத்திமா ஆலயம் எதிரில், டான்போஸ்கோ பள்ளி எதிரில், கோரிமேடு அரசு செயலர்கள் குடியிருப்பு சந்திப்பில்இரண்டு என, மொத்தம் ஐந்து இடங்களில் வேகத்தடைகள்இருந்தன.இதனால் வாகன விபத்துக்கள் குறைந்து, சாலையை அச்சமின்றி கடக்க முடிந்தது.கடந்த மாதம் 23ம் தேதி, ஜனாதிபதி வருகையால், இந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

அவைமீண்டும் அமைக்கப்படவில்லை.பொதுமக்கள், அச்சத்துடன் சாலையை கடந்து வருகின்றனர். சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது.இச்சாலை மொரட்டாண்டி டோல்கேட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் தான் வேகத்தடை அமைக்க வேண்டும். மாநில பொதுப் பணிதுறை,கலெக்டர் பலமுறை கூறியும், வேகத் தடை அமைக்கப்படவில்லை. மாறாக, தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதால், அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வாய்ப்பு இல்லை என, டோல்கேட் நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'கோரிமேடு சாலை டோல்கேட் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதற்கெடுத்தாலும் அவர்களை அணுக வேண்டியுள்ளது. பிரதமர், துணை ஜனாதிபதி வருகையின்போது வேகத்தடையை அகற்றி,மீண்டும் அமைத்ததற்கான தொகை இதுவரை எங்களுக்கு வரவில்லை. சாலையில் 7.2 மீட்டர் நீளத்திற்கு வேகத்தடை அமைத்து, வெள்ளை அடிப்பது உள்ளிட்ட பணிக்கு, ஒரு வேகத்தடைக்கு ரூ. 70 ஆயிரம் செலவாகிறது. புதுச்சேரி அரசுஅழுத்தம் கொடுத்தால் மட்டுமே வேகத்தடை அமைக்க முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X