தமிழ்நாடு

ண மேல்மங்கலத்தில் நெல் அறுவடை... ண கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா

Added : ஜன 16, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி,மேல்மங்கலத்தில் முதல் போக நெல் அறுவடை பணி துவங்கி உள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்லத்தில் கிணற்று நீர் மற்றும் வரத்துக்கால்வாயில் வரும் நீரை ஆதாரமாக கொண்டு 500 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல் விளைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அறுவடை பணி துவங்கியுள்ளது.நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கடந்த வாரம் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் 61 கிலோ எடை கொண்ட நெல் மூடை 900 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.இதே எடை கொண்ட நெல் மூடை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால் ஆயிரத்து 150 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைக்கும்.இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .எனவே மேல்மங்கலத்தில் தாமதமின்றி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X