சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்து பயணம்

Added : ஜன 16, 2020
Advertisement

பெரியகுளம், பெரியகுளத்தில் விதிமுறைகளை மீறி சரக்கு வாகன கேபினில் தொழிலாளர்களை ஆபத்தாக ஏற்றிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் பகுதியில் ஆலைகரும்பு அதிகம் அறுவடை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் கரும்பு அதிகம் நிரப்பி, லோடு ஏற்றும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கோடவுனுக்கு செல்லும் லாரி, மினிலாரி உட்பட வாகனங்கள் மீதுள்ள கேபினில் தொழிலாளர்கள் உட்காருகின்றனர். அதிக பாரத்துடன் இயக்கப்படும் சரக்கு வாகனத்தின் மீது அவர்கள் செல்லும் போது விபத்தில் சிக்குகின்றனர். சில மாதங்களுக்கு முன் வடுகபட்டியிலிருந்து, வெள்ளைப்பூண்டு மூடைஏற்றிச் சென்ற லாரி, பெரியகுளம் அருகே வேகத்தடையில் ஏறி, இறங்கிய போதுஇருவர் விழுந்து காயமடைந்தனர். சரக்கு வாகன கேபினில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதை தடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X