இந்தியா

இலவச துணிக்கு பணம் வழங்க ஒப்புதல்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : இலவச துணி, பார்லிமெண்ட் தேர்தலில் பணியாற்றிய போலீசாருக்கான மதிப்பூதியம், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான நிலுவைத்தொகை வழங்க, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து, ராஜ்நிவாஸ் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஆதி திராவிடர்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, வருமானம் அடிப்படையில் இலவச துணி வழங்கப்பட்டு வருகிறது.ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகை இலவச துணிக்குரிய தொகையாக தலா 500 ரூபாய், 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகை தொகை இலவச துணிக்குரிய 500 ரூபாய் என, மொத்தம் 1000 ரூபாயை பணமாக வழங்க, நேற்று கவர்னர் மாளிகைக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதற்கு, கவர்னர் கிரண்பேடி உடனடியாக ஒப்புதல் அளித்தார்.இத்தொகை, ஆதிதிராவிடர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம், 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 நபர்கள் பயனடைவர்.

இதன் மூலம், 13 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஆகும்.இத்திட்டத்தில் பழங்குடியினரையும் சேர்க்க ஆதிராவிடர் நலத்துறையை கவர்னர் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு ஒரு ஜோடி இலவச துணி கொடுக்கும் வகையில், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 900 ரூபாய் பணமாக வழங்குவதற்கான கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்தார். இந்த தொகை, அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதற்கு, அரசுக்கு 12 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இதன் மூலம் வறுமைக்கோட்டில் கீழ் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போலீசாருக்கு13வது மாத சம்பளம்போலீஸ் துறைக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கி, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தொகையில், போலீசாருக்கு, 13வது மாத சம்பளம் மற்றும் பார்லிமெண்ட் தேர்தலின்போது பணியாற்றிய போலீசாருக்கு மதிப்பூதியம், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான நிலுவைத்தொகை வழங்க, முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X