பொது செய்தி

தமிழ்நாடு

தேனிமாவட்ட கோயில்களில் தைப்பொங்கல் சிறப்பு பூஜை

Added : ஜன 16, 2020
Advertisement

தேனி, ட்டி நேற்று தேனிமாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.மாவட்டத்தில் தைப்பொங்கல் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை தேனி பஜாரில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள், கால்நடைகளுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர்.நேற்று காலையில் வீடுகள், நிறுவனங்கள்முன் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரப்ப அய்யனார் கோயில், கணேச கந்தபெருமாள் கோயில், வேல்முருகன் கோயில், அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோயில், வரதராஜபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்து புஞ்சை, நஞ்சை சாகுபடி சிறப்பாக இருந்ததால் பொங்கல் உற்சாகம் களைகட்டியது.*பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி மற்றும் துர்க்கைஅம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் உற்சவர் அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சியளித்தார்.கம்பம்ரோடு காளியம்மன் கோயில், கவுமாரியம்மன், திரவுபதிஅம்மன் கோயில்களில் பூஜை நடந்தது.காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அபிேஷக, ஆராதனை நடந்தது. உற்சவர் சந்திரசேகரனாக எழுந்தருளி பெருமாள்கோயில், தெற்குஅக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் பகுதிகளில் வீதி உலா வந்தார். ஷீரடி சாய்பாபா கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயில், பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கிடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான கோயில்களில் குலதெய்வ வழிபாடும் நடந்தது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது.*போடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெருமாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். சுவாமி அலங்காரத்தை அர்ச்சகர் கார்த்திக் செய்தார்.போடி சுப்பிரமணிய சுவாமி கோயில்,புதுார் சங்கடஹர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயில், ஐயப்பன் கோயில், பிச்சாங்கரை கயிலாய கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர், பரமசிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் சிவனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X