பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி, பள்ளிகளில் சமத்துவப்பொங்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவப்பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் பிரசன்னவெங்கடேசன், துணைத்லைவர்கள் ரேணுகா, சுதாமீனாட்சி, பொறியியல் கல்லுாரி முதல்வர் பாண்டிகுமார், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் காசுமாயன் முன்னிலை வகித்தனர். கணபதி பூஜை, கோமாதா பூஜைகளை தொடர்ந்து அனைத்து துறை சார்பில் பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறியடி, இசைநாற்காலி, கவிதை, கட்டுரை போட்டிகள் நடந்தது. அதில்வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.ஜி.உசிலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. தலைமையாசிரியர் கனகவேல் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து மாணவ, மாணவிகளுடன் பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் , அலுவலர்கள் செய்திருந்தனர்.தேவதானப்பட்டி காட் ரோடு மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஒலிவராணி தலைமை வைத்தார். இயக்குனர் செந்தில் பிரபு முன்னிலை வகித்தார். முதல்வர் சண்முகப்பிரியா வரவேற்றார்.மாணவ மாணவிகள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து பொங்கல் வைத்தனர் .பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை காளீஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் பஞ்சவர்ணம், மகாலட்சுமி, சரண்யா, கிரிஜா, தேவதர்ஷினி, சங்கீத பிரியா , அழகு பாண்டியம்மாள் செய்திருந்தனர்.சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி செயலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சோமசுந்தர பாண்டியன் வரவேற்றார். சமத்துவ பொங்கல் வைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கினர். விளையாட்டு போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பாலாம்பிகை, சரவணன் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X