தரமற்ற பணியால் 9 மாதமாக தொடரும் சோதனை ஓட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement

தேனி, சோதனை ஓட்டம் முறையாக நடக்காததால் புதிய குடிநீர் திட்டத்தை தேனி நகராட்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 28 ஆயிரம் சொத்து வரிகள் உள்ளன. நகருக்கு அருகில் வைகை அணை இருந்தாலும் தேனி குடிநீர் பஞ்சத்தில் தவித்தது. குடிநீர் பிரச்னை தீர 3 ஆண்டுகளுக்கு முன் துணை முதல்வரின் தீவிர முயற்சியால் வைகை பிக்கப் டேம் இருந்து நீர் எடுத்து சுத்திகரித்து நாள் ஒன்றுக்கு 150 லட்சம் லிட்டர் வழங்க ரூ. 68.83 கோடியில் தேனிக்கு புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கின. பணி முடித்து 2019 ல் மார்ச்சில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை.அரைகுறை பணிதிட்டமிட்டபடி பணிகள் முடிந்தது. ஆனால் நகரில் பல பகுதிகளுக்கு புதிய குடிநீர் திட்ட நீர் முறையாக செல்லவில்லை. 11 மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீரை ஏற்றி, 22 ஜோன்களுக்கு சப்ளை செய்ய வேண்டும். தரமில்லாத பணிகளால் பல இடங்களில் குழாய் உடைந்து நீர் விரையமாகி வருகிறது. ஒரு மேல்நிலை தொட்டியிலும் முழுவதுமாக தண்ணீர் ஏற்றி சப்ளை வழங்க இயலவில்லை. பணி முடிந்து 9 மாதங்கள் ஆகியும் சோதனை ஓட்டத்தை சிறப்பாக முடிக்க இயலவில்லை.ஒப்பந்த நிறுவனம், சோதனை ஓட்டம் நடத்தும் பெயரில் பழைய குடிநீர் இணைப்புகளுக்கும் தண்ணீர் விடாமல் அடைத்து அலட்சியம் செய்கின்றனர். இதனால் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி அச்சம் குடிநீர் திட்ட பணி சோதனை ஓட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக நகராட்சி வசம் ஒப்படைத்து விட்டு தன்னை விடுவிக்க நிறுவனம் நினைக்கிறது. நகராட்சி நிர்வாகமோ இச்சூழ்நிலையில் திட்டத்தை பெற்றால் மக்களுக்கு சீரான சப்ளை வழங்க முடியாது. பின் கட்டணம் வசூலிக்க இயலாமல் , திட்டத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல், பராமரிப்பு கட்டணம் கூட வசூலிக்க இயலாத நிலை ஏற்படும். நிதிச்சுமை அதிகமாகும் என கருதி திட்டத்தை பெற்றுக்கொள்ள தயங்குகிறது. ஆனால் ஒப்பந்தநிறுவனம் உயரதிகாரிகள், ஆளும் கட்சியினர் மூலம் 'பிரஷர்' கொடுத்து ஒப்படைக்க முயல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X