பொது செய்தி

தமிழ்நாடு

பென்னிகுவிக் பிறந்தநாள் விழா

Added : ஜன 16, 2020
Advertisement

கூடலுார், பென்னிகுவிக்கின் 179 வது பிறந்த நாள் விழாவை, இந்த ஆண்டு முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடியதால் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் நேற்று களை கட்டியது.பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக், தென் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவரது பிறந்த நாளான ஜன. 15, தமிழர்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் தினத்தன்று இருப்பதால், இவரது பிறந்த நாள் விழாவை பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர். லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபத்தில் பென்னிகுவிக்கின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்ட பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மலர் துாவி பிறந்தநாள் விழாவை துவக்கி வைத்தார். தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், சாய்சரண் தேஜஸ்வி எஸ்.பி., முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க.,கூடலுார் நகர செயலாளர் அருண்குமார் , அக்கட்சியினர், பொதுப்பணித்துறையினர் உடன் இருந்தனர்.இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், கூடலுார் அனைத்து விவசாயிகள் நலச்சங்கம், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம், முல்லை சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு பாதுகாப்புக்குழு, ஒக்கலிகர் விவசாயிகள் நலச்சங்கம், கூடலுார் மக்கள் மன்றம், பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செய்தனர். மேலக்கூடலுார் மந்தையம்மன் கோயில் கள்ளர் பொதுநலச்சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X