வரத்து அதிகரிப்பால் மொச்சை விலை சரிவு

Added : ஜன 16, 2020
Advertisement

தேவாரம், மொச்சைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு ரூ. 10 விலை சரிந்து, மொத்த விலையில் ரூ. 30க்கு விற்பனையாகிறது.கூடலுார் முதல் போடி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் மொச்சை சாகுபடி நடக்கிறது. இதன் அறுவடை தீவிரமாக நடப்பதால் வரத்து அதிகரித்துள்ளது. தை பொங்கல் தொடர் விடுமுறையால் மற்ற காய்கறிகள் விலை அதிகரித்துள்ள நிலையில், மொச்சை விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 40க்கு மேல் விற்பனையான மொச்சை, தற்போது ரூ. 30க்கு விற்பனையாகிறது.தேவாரம் கமிஷன் கடை உரிமையாளர் வெங்கடேஷன் கூறுகையில், ''மொச்சை தவிர்த்து மற்ற காய்கறிகள் வரத்து சரிந்துள்ளதால், அவற்றின் விலை சற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 20க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த விலையில் விற்பனையாகிறது. அதே போல ரூ. 30க்கு விற்ற துவரை ரூ.35 முதல் ரூ.40க்கும், ரூ. 25க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ. 40க்கும், ரூ.30க்கு விற்பனையான தட்டை பயறு ரூ. 35 முதல் ரூ. 40க்கும் விற்பனையாகின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X