பிரதமர் மோடியுடன் உரையாடல் தேனி மாணவர்கள் இருவர் தேர்வு| Dinamalar

தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் உரையாடல் தேனி மாணவர்கள் இருவர் தேர்வு

Added : ஜன 16, 2020
Share
தேனி, டில்லியில் பிரதமர் மோடியுடன் உரையாட தேனி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜன., 20ம் தேதி அனைத்து பள்ளிகளில் காண ஏற்பாடு செய்துள்ளனர்.பிரதமர் மோடி , பள்ளி மாணவர்களுடன் ஜன. 20 ல், 'பரிச்சா பே சர்ஜா' என்ற தலைப்பில் தேர்வு தொடர்பாக பேச உள்ளார். இதற்கான மாணவர் தேர்வை ஆன்-லைன் மூலம் 'பாடத்தேர்வு' என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டுரைகளை அனுப்பினர். இதில் தேனி

தேனி, டில்லியில் பிரதமர் மோடியுடன் உரையாட தேனி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜன., 20ம் தேதி அனைத்து பள்ளிகளில் காண ஏற்பாடு செய்துள்ளனர்.பிரதமர் மோடி , பள்ளி மாணவர்களுடன் ஜன. 20 ல், 'பரிச்சா பே சர்ஜா' என்ற தலைப்பில் தேர்வு தொடர்பாக பேச உள்ளார். இதற்கான மாணவர் தேர்வை ஆன்-லைன் மூலம் 'பாடத்தேர்வு' என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டுரைகளை அனுப்பினர். இதில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர் ஹரிபாரதி, பிளஸ் 2 மாணவர் தருண் பிரகாஷ் தேர்வாகினர். இவர்கள் முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவியிடம் வாழ்த்து பெற்றனர். இவர்கள் 16 ம் தேதி சென்னையில் இருந்து டில்லிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். தமிழகத்தில் 66 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். ஜன., 20ல், காலை 11:00 மணிக்கு இம்மாணவர்களுடன் பிரதமர் உரையாடுகிறார்.இந் நிகழ்ச்சியை மாணவர்கள் காண்பதற்கு கம்ப்யூட்டர், லேப்-டாப். பவர் பாய்ன்ட் எல்.இ.டி. 'டிவி 'வசதி என செய்ய அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X