பொது செய்தி

தமிழ்நாடு

போடி கல்லூரியில் கருத்தரங்கம்

Added : ஜன 16, 2020
Share
Advertisement

போடி,போடி சி.பி.ஏ., கல்லுாரியில் தமிழ்துறை தமிழ்மன்றம், உரத்த சிந்தனை அமைப்பினர் சார்பில் பாரதி சிந்தனைகள் குறித்து இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 'பாரதி உலா'கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். முதல்வர் ராஜகுமாரன், உரத்த சிந்தனை பொதுச்செயலாளர் உதயராம், இணைச்செயலாளர் முத்துவிஜயன், புலவர் கள்ளிப்பட்டி குப்புசாமி, ஆடிட்டர் ஜெகதீஸ், பேராசிரியர்கள் சிவக்குமார், பூங்குன்றன், பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், பாலமுருகன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அலமேலு வரவேற்றார்.திரைப்பட இயக்குநர் ராசிஅழகப்பன், பாரதி சிந்தனைகள் குறித்து பேசினார். பாரதி பற்றி பேச்சுபோட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மலைச்சாமி, பேராசிரியர்கள் மீனா, தேவர்பொம்மிநாயக்கர், பால்பாண்டி, சதானந்தவேல், முத்தீஸ்வரி, மாசிலாமணி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X