சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை வழக்கு: பயங்கரவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (17)
Advertisement
எஸ்.ஐ., கொலை வழக்கு:  பயங்கரவாதிகள் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: எஸ்.ஐ. கொலை வழக்கில் கர்நாடகாவில் கைதானவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வாகன சோதனைச் சாவடியில் ஜன. 8ல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.இந்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் தலையில் தொப்பி அணிந்தவாறு தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் போலீசுக்கு கிடைத்தது.




குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஜன. 8ம் தேதி, இரவு பணியில் இருந்த, மார்த்தாண்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இவரை சுட்டுக் கொன்ற 2 தீவிரவாதிகள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதை ஆய்வு செய்ததில் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் 32, கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் 28 என்பது தெரிந்தது. இரண்டு வாலிபர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மத பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு உள்ளதா அல்லது ரியல் எஸ்டேட் மற்றும் கட்ட பஞ்சாயத்து கும்பல் பின்னணியா என விசாரணை நடந்துவருகிறது.
இன்று ஆஜர்
உடுப்பியில் கைதான பயங்கரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் இருவரும் நேற்று குமரி மாவட்ட போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்.பி., ஸ்ரீநாத் தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.,க்கள், 20 போலீசார் கொண்ட குழுவினர் அவர்களை அழைத்து வருகின்றனர். இன்று இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-202012:12:30 IST Report Abuse
Syed Mustafa தூக்கு / என்கவுண்டர் ? உடனடி தேவை
Rate this:
Share this comment
Cancel
Ameen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-202010:56:12 IST Report Abuse
Ameen தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இஸ்லாம் சமத்துவம், சகோரத்துவத்தையே போதிக்கின்றது. இஸ்லாத்தில் தீவிர வாதத்திற்கு என்றுமே இடமில்லை.
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
16-ஜன-202010:51:06 IST Report Abuse
TamilArasan அவ்வளவு சீக்கிரம் போட்டுராதீங்க....அணுஅணுவா சித்திரவதை செய்து இத்தனை நாளாய் யார் யார் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்தார்கள் என்று கண்டுபிடித்து அத்தனை பேரையும் தண்டித்தால்தான் இது போன்று தீவிரவாதிகள் தோன்றமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X