இந்தியா

இசை, நாட்டிய விழா

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : கலை பண்பாட்டு துறை சார்பில், கடற்கரை சாலையில் திருவள்ளுவர் விழா மற்றும் சிறுவர், சிறுமியர் இசை நாட்டிய விழா இன்று துவங்குகிறது.

புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து, திருவள்ளுவர் விழா, சிறுவர் சிறுமியர் இசை, நாட்டிய விழா, இன்று 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.இன்று மாலை 6:30 மணிக்கு, கடற்கரை காந்தி திடலில் நடக்கும் துவக்க விழாவில், முதல்வர் நாராயணசாமி, கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன், துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.நாளை மாலை 6:30 மணிக்கு, கடற்கரைச்சாலை, அம்பேத்கர் மணிமண்டபம் எதிரில், சிறுவர் சிறுமியர் இசை விழா நடக்கிறது. அதே இடத்தில், 18ம் தேதி சிறுவர், சிறுமியர் நாட்டிய விழா நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X