இந்தியா

புதிய 'மாஸ்டர் பிளான்' அடிப்படையில் நிலம், கட்டடங்களுக்கு வளர்ச்சிக் கட்டணம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில், புதிய 'மாஸ்டர் பிளான்'படி நிலம், கட்டடங்களுக்கான வளர்ச்சிக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பகுதியின் மொத்த பரப்பளவு 294 சதுர கிலோ மீட்டர். ஆனால், 1982ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் மாஸ்டர் பிளானில், 41.91 சதுர கிலோ மீட்டர் பகுதி மட்டுமே கொண்டு வரப்பட்டது.

கடந்த 1997ம் ஆண்டில், இந்த 'மாஸ்டர் பிளான்' மறு ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், 41.91 சதுர கி.மீ., பரப்பளவு என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகை, எதிர்கால தேவைகள் அடிப்படையில் புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கு, புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, கமிட்டி அமைக்கப்பட்டு, அகமதாபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது.புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணி, 2015ம் ஆண்டில் துவங்கியது.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள், வில்லியனுார், பாகூர், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன்களை உள்ளட்டக்கியும், புதுச்சேரியின் மொத்த பரப்பளவான 294 சதுர கி.மீ., உள்ளடக்கி, புதிய மாஸ்டர் பிளான் 'சாட்டிலைட் மேப்' உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.வரும் 2036ம் ஆண்டில், புதுச்சேரி பகுதியின் மக்கள் தொகை 16.3 லட்சமாக இருக்கும் என கணக்கிட்டு, அதனடிப்படையில் என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன் புதிய 'மாஸ்டர் பிளான்-2036' தயாரிக்கப் பட்டுள்ளது.இந்த புதிய மாஸ்டர் பிளான்படி, நிலம், கட்டடங்களுக்கான வளர்ச்சி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிலத்தினை பொறுத்தவரை, புதிய மாஸ்டர் பிளான் எல்லைக்குள் வரும் நகர நில பகுதிக்கு சதுர மீட்டருக்கு 25 ரூபாயும், எல்லைக்குள் இருக்கும் நில பகுதிக்கு சதுர மீட்டருக்கு 15 ரூபாயும், வளர்ச்சிக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.இதேபோல் கட்டடங்களை பொறுத்தவரை, புதிய மாஸ்டர் பிளான் எல்லைக்குள் இருக்கும் கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 20 ரூபாய், எல்லைக்கு வெளியே இருக்கும் கட்டங்களுக்கு சதுர மீட்டருக்கு 10 ரூபாய் வளர்ச்சிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, விரைவில் அமலுக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X