இந்தியா

உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'சிகரத்தை நோக்கி' உயர்கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம், காரைக்காலில் நடந்தது.மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர் கமலக்கண்ணன், கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி - மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன், பொறியியல் கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி, மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லுாரி முதல்வர் நளினி ராஜகோவிந்தன் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ.,க்கள் திருமுருகன், அசனா, கீதா ஆனந்த், சந்திர பிரியங்கா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, உயர்கல்வியின் முக்கியத்துவம், வழிகாட்டுதல் குறித்து பேசினார். பேச்சாளர் ஜெகன், பலதுறை சாதனையாளர்களை எடுத்துகாட்டாக கூறி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண்மொழி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X