இந்தியா

சுப்பையா நகர் கோவிலில் மகர ஜோதி தரிசன விழா

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : சுப்பையா நகர் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில், மகர ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது.தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது.

இங்கு, மண்டல மகர ஜோதி பூஜை மற்றும் 10ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா, கடந்த மாதம் 15ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, கடந்த 17ம் தேதி சிறப்பு பூஜை, 24ம் தேதி திருவிளக்கு பூஜை, 25ம் தேதி அன்னதான பூஜை, 26ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்வான, மகர ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. அதையொட்டி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள வித்யா கணபதி கோவிலில் இருந்து மாலை 4:00 மணிக்கு, சுவாமி திருவாபரண பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சுப்பையா நகர் வீதிகள் வழியாக வலம் வந்து, அய்யப்ப சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு கோவிலில் மகர ஜோதி தரிசனம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X