இந்தியா

அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : 'அரசாங்கத்தில் உள்ள யாரும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்ல முடியாது' என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள், சிங்கப்பூர் நாட்டிற்கு அரசு அனுமதி இல்லாமல் சென்று வந்தனர். ஆனால் அது தனிப்பட்ட பயணம், கேசினோ உள்ளிட்ட முதலீட்டு வர்த்தக பயணமாக மாற்றிவிட்டோம் என்று தெரிவித்தனர். வெளிநாட்டிற்கு செல்ல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் வாங்கவில்லை.இந்நிலையில், வெளிநாடு செல்லும்போது அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அரசிடமிருந்து தெளிவான விளக்கம் வந்துள்ளது. இதற்காக, மத்திய அரசுக்கும் உள் துறைக்கும் ராஜ்நிவாஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அரசாங்கத்தில் உள்ள யாரும் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இனி வெளிநாட்டிற்கு செல்ல முடியாது. இதை அரசு துறைஅதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த விவகாரத்தில் மக்களை தவறாக வழி நடத்தியுள்ளனர். வெளிநாடு செல்லும்போது இரண்டு வகையான சட்ட வழிமுறைகள் உள்ளன. ஒன்று, அரசு அதிகாரிகளுக்கானது; மற்றொன்று, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரநிதிகளுக்கானது. இது, ஏற்கனவே கவர்னர் மாளிகையால் தெளிவுபடுத்தப் பட்டது. இப்போது மத்திய அரசும் அனைத்தையும் தெளிவுபடுத்தி உள்ளது.

அமைச்சர் ஒருவர், அடிக்கடி ஒரு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அது பற்றி தலைமை செயலாளர், கவர்னர் மாளிகை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. சிலர், போக கூடாத நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர். நிர்வாகத்திடம் அது பற்றிய ஆவணம் இல்லை. இவை அனைத்தும் இனி கண்காணிப்பில் வரும்.இவ்வாறு, சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X