இந்தியா

மாற்றுத்திறனாளிகளை உதாசீனப்படுத்துவதா

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையை கண்டித்து, அனைத்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் கண்டனப் பேரணி, பொதுகூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மறுவாழ்வு இயக்க மாநில தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 30 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள், சமூக நலத் துறை மூலம் வழங்கப்படும் மாத உதவித்தொகையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை, நடப்பு மாதத்திற்கான உதவித் தொகை வழங்கப்படவில்லை.மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 15 கிலோ இலவச அரிசியும், தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை மற்றும் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகளை அரசு உதாசீனப்படுத்தி வருவதை கண்டித்து, வரும் மார்ச் மாதத்தில் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X