இந்தியா

கசப்பானதாக மாறியது தித்திக்கும் பொங்கல்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுச்சேரி : ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இதுவரை சம்பளம் கிடைக்காததால், தித்திக்கும் பொங்கல் கசப்பான பொங்கலாக மாறியது; வருத்தப்பட வேண்டாம். சம்பளம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, டி.ஜி.பி., கூறி உள்ளார்.

புதுச்சேரி காவல் துறையில், 4000க்கும் அதிகமான போலீசாருடன், 491 ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு வழங்கும் நாளிலேயே, ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.போலீசுக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கு சம்பளம் வழங்க கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, தினசரி 500 ரூபாயாக இருந்த சம்பளம், தற்போது காவலர்களுக்கு இணையாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களாக ஊர்க்காவல் படையினருக்கு காலம் தாழ்த்தி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் மாத சம்பளம், நேற்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, குறுந்தகவல் ஒன்றை அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.அதில், 'ஊர்க்காவல்படை வீரர்களுக்கு எனது இதயபூர்வமான வெளிப்பாடு. இதுவரை சம்பளம் கிடைக்காததால், தித்திக்கும் பொங்கல் கசப்பான பொங்கலாக மாறியது. சம்பளத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

நேரடியாக தொடர்பு கொண்டு முயற்சித்து வருகிறேன். சம்பளம் விரைவில் வழங்கப்படும். இது உறுதி. நம்பிக்கையுடன் இருங்கள்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X